தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 6-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக, ‘வெறுப்பு பேச்சுகளால் வளைகுடா நாடுகள் இந்தியாவிற்கு கண்டனம்… வெளியுறவு கொள்கையை எப்படி கையாளப் போகிறது இந்தியா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Nellai D Muthuselvam
யாருக்காகவும் வெளியுறவு கொள்கைகளில் எந்த நாளும் சமசரம் செய்யாது இந்தியா. வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வளைகுடா நாடுகள் மியான்மர் , சீனாவில்,சிரியாவில் இஸ்லாமியர்களை படுகொலை செய்கிறார்களே அதை தடுக்க முடியாத போதே இவர்கள் வலிமை ஒற்றுமை புரிந்தது . இஸ்லாமிய அகதிகளை ஏற்க மனமில்லாத நாடுகள் அவை. அவற்றின் கண்டனங்களை இந்தியா பெரிதுபடுத்த தேவையில்லை. இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். வளைகுடா நாடுகளுக்கு இந்திய அரசு அளித்த விளக்கம் போதுமானது.
Jayaseelan
எல்லாம் மத்திய அரசு பார்த்து கொள்ளும்…. ரொம்ப குழம்ப வேண்டாம்.
Akbarali Mohamed
மதங்கள் என்பது கண்ணாடி கூண்டு; அடுத்தவன் கூண்டை நீ தாக்கும் போது உன் கண்ணாடி கூண்டு இன்னும் பலமாக தாக்கப்படும் என்பதை மறவாதே.
Cheraman Hakeem
இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளால் அந்த கட்சியை சார்ந்தவர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள் அந்த கட்சியும் விரும்புகிறது என கடந்த கால அரசியல் செயல்பாட்டின் மூலமாக உணரமுடிகிறது.
Kuberan
இருக்கவே இருக்கு பேராயுதம் பாகிஸ்தான் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்வார்கள் நேருவின் மீதும் பழி போட்டு தப்பித்துக் கொள்வார்கள்.
Jana
அதான் BycottQatarAirways னு hashtag போட்டு டிரென்ட் பண்ணி, அவங்க economy ah செத்தச்சுட்டோம்ல.
S.J.DASHNA
உலக நாடுகள் இந்தியாவை நோக்கி படை எடுத்தாலும் அதற்கு மத்திய பாசிச பாஜக அரசுதான் முழு காரணம்.
இதையும் படிக்கலாமே: `பாஜகவின் வளர்ச்சி தி.மு.க.வுக்குதான் சரிவை ஏற்படுத்தும்!’- வாசகர்களின் கமெண்ட்ஸ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM