கனடாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தீவிபத்தில் வயதான தம்பதி உயிரிழந்துள்ளனர்.
Campbellton நகரில் இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்த நிலையில் நேற்று பொலிசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடர்பான தகவல் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 80 வயதுக்கு மேல் உள்ள கணவன் மற்றும் மனைவி வசித்த வீட்டில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது, இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
CBC
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வந்த போது தம்பதி இருவரும் வீட்டில் சடலமாக கிடந்தனர்.
இதையடுத்து இருவரின் சடலங்களும் கைப்பற்றப்பட்டது.
பின்னர் தடயவியல் அடையாள சேவைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு ஆணையர் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.