பொதுவாகவே அரசுத் துறையாக இருந்தாலும் சரி தனியார் நிறுவனமாக இருந்தாலும் சரி ஒரு வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் வேலை இருக்கும். பெரும்பாலான இடங்களில் 6 நாட்கள் வேலை நடைமுறைதான் அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே விடுமுறை. பணி நேரமும் அதிகமாக இருப்பதால் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதேநேரம் வேலையும் பாதிக்கப்படக் கூடாது.
இந்நிலையில், ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது சோதனை ஓட்டமாக இங்கிலாந்தில் 70 நிறுவனங்களில் இந்த வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்று வேலை பார்க்கின்றனர். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் பணி நடைபெறும். நிதிச் சேவைகள், உணவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் இந்த முறையில் ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படாது. இந்த நடைமுறையால் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட கூடுதல் அவகாசம் கிடைக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் இன்னும் நேரம் எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவதால் நிறுவனத்தின் வளர்ச்சியோ அல்லது உற்பத்தியோ குறைந்துவிடக் கூடாது.
சமயம் தமிழ் செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யவும்!
இதுபோன்ற விஷயங்களை ஆராய்ந்த பின்னரே முறைப்படி இத்திட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இத்திட்டம் முதன்முதலில் 2015-19 ஆண்டுகளில் ஐஸ்லாந்தில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்தில் சோதனை அடிப்படையில் வந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஸ்பெயின், ஸ்காட்லாந்து ஆகிய நாட்களில் அமலுக்கு வருகிறது.