Tamil Serial Bharathi Kannamma Rating Update With Promo : சார் உங்களுக்கு ஆக்ஷன் சீன்லாம் கொடுக்கும்போதே நெனச்சேன் நீங்கதான் இந்த சீரியலின் அடுத்த ஹீரோ அதே மாதிரி செம்மாய பின்றீங்க போங்க என்று சொல்ல வைத்துள்ளது பாரதி கண்ணம்மா.
ஒரு தலை காதல் தீவரமானால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எக்ஸ்ட்ரீம் லெவலில் காட்டிய சீரியல் தான் பாரதி கண்ணம்மா. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த சீரியலே முடிந்துவிடும் அதுக்காக ஏன்பா சென்னையில் ஒருநாள் படத்தை எல்லாம் கொண்டு வறீங்க…. பாரதி கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைங்க இல்ல பிரிச்சு வைங்க அத விட்டுட்டு சேர்ந்தே இருப்பாங்களாலம் ஆனா கண்ணம்மா மே பாரதிக்கு கோபம் போகவே போகாதாம் என்ன இது என்று பல்வேறு விமர்சனங்கள்.
கண்ணம்மா தப்பு பண்ணிவிட்டான் என்பதற்கு பாரதியிடம் எந்த ஆதாரமும் இல்லை. வெண்பா செய்த சூழ்ச்சிதான் என்பதை கண்டுபிடிக்கவும் இல்லை. குடும்பத்தின் வாரிசுக்கு விஷம் வைத்து கொல்லப்பார்த்த வெண்பாவை மன்னித்துவிடுவார் ஆனால் காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி கண்ணம்மா தப்பு பண்ணிருப்பாளா என்று யோசிக்க கூட மாட்டார். ஏன்னா இவர் வித்தியாசமான ஹீரோ.
இந்த ஹீரோ தற்போது வெண்பாவை முழுவதுமாக விட்டுவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். அதே சமயம் வெண்பாவுக்கு அவர் அம்மா மாப்பிள்ளை பார்க்கும் படத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆனால் உஷாரான வெண்பா வர்ற மாப்பிள்ளை எல்லாரையும் அவர்கள் தன்னை பிடிக்காத மாதிரி எதையாவது செய்து ஓடவிட்டுவிடுகிறார்.
இப்படி இருக்கும்போது கடந்த வாரம் ரவுடிகளிடம் மாட்டிய வெண்பாவை காப்பாற்ற ஒருவர் வந்தார். அவர் தன்னை காப்பாற்றியதால் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கிறார். அவர் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிகிறது அவர் வெண்பாவுக்காக அவரது அம்மா பார்த்த மாப்பிள்ளை என்று. இதனால் ஷாக் ஆகும் வெண்பா என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.
இப்போது வந்த மாப்பிள்ளையிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று கூறி வெண்பா அவரை பீச் பக்கத்தில் அழைத்து சென்று பாரதியை காதலிப்பது குறித்து அனைத்து உண்மையையும் சொல்லிவிடுகிறாள். இதை கேட்டு ஷாக் ஆகும் மாப்பிள்ளை, ஊர்ல இருந்து வரும்போது நீதான் என் வைஃப் நாம திருமணம் செய்துகொண்டு வாழப்போகிறோம் என்று கற்பனை செய்துகொண்டு வந்தேன். இப்போது நான் என்ன செய்வேன் வெண்பா என்று கூறி அழுகிறார்.
இதை வெண்பா பார்த்துக்கொண்டிருக்க சடனாக மாப்பிள்ளை அடி தூள் என்று சொல்ல சிரிக்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும், சூப்பர் மாப்ள வென்பாவுக்கே ஷாகிங் குடுக்குரிங்க என்று வெண்பாதான் இதுவரைக்கும் மற்றவர்களை ஆட்டி படைத்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவரையே மிரளவைக்க 2 பேர் வந்துவிட்டார்கள் என்று கூறி வருகின்றனர்.