போராட்டங்களால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஆதரவாக செயற்பட வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் ஊடவியலாளர் வினவியபோது, நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு பொலிசார் அதிகளவு காலத்தை செலவிடுவதாகவும், கப்பம் கோருபவர்கள் மற்றும் பாதாள உலகத்தை சேர்ந்தவர்கள் நிபந்தனைகளை விதிக்க அனுமதிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் சில இயக்கங்களின் நடவடிக்கைகளினால் பொலிஸாரை குறை கூற முடியாது என குறிப்பிட்ட அவர், பொது மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் போராட்டக்காரர்களால் தினமும் வீதிகள் மூடப்படுவது போன்ற சம்பவங்களுக்கு பொலிஸாரும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது எனவும் கூறினார்