உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. இதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது. சிறிய மாநிலங்களுக்கு அனுப்பி கோவா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
பொதுமக்களுக்கான பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் தொடர்பான உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், 2021 -2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
பெரிய மாநிலங்களின் பட்டியலில் 2021 -2022 ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் குஜராத் மாநிலமும், மூன்றாவது இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் இடம்பிடித்துள்ளது.
இதேபோல் சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா மாநில முதலிடம் பிடித்துள்ளது. மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் மாநிலம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.