அடுத்த ஐபிஎல்.. கிரவுண்டை விட, கிரவுண்டுக்கு வெளியில் தான் சுவாரஸ்யமாக இருக்க போகிறது..!

அட்டகாசமாக நடந்து முடிந்த 15வது ஐபிஎல் போட்டியில் டாடா நிறுவனம் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு டைட்டில் ஸ்பான்சர்-ஐ கைப்பற்ற அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்திற்குச் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து உள்ளது.

ஐபிஎல் போட்டிகளைச் சுற்றி ஏற்கனவே அதிகப்படியான வர்த்தகம் நடந்து வரும் நிலையில் நடக்க இருக்கும் ஏலத்தின் மூலம் அதிகப்படியான வருமானத்தைப் பெற ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதனால் அணிகள் மத்தியிலான போட்டியும் சரி, ஒளிபரப்பு ஏலத்தில் போட்டியும் சரி மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஎஃப்சி எடுத்த அதிரடி முடிவு.. முட்டைகோஸ்-ஆல் அவதிப்படும் ஆஸ்திரேலிய மக்கள்..!

ஐபிஎல் பிராட்காஸ்டிங்

ஐபிஎல் பிராட்காஸ்டிங்

2023ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் பிராட்காஸ்டிங்-ன் 5 வருடத்திற்கான உரிமை 40,000 கோடி ரூபாய் முதல் 50,000 கோடி ரூபாய் வரை செல்லக்கூடும் என்று சந்தை கணிப்புகள் கூறுகிறது. 2018 ஆம் ஆண்டு ஏலத்தைக் கைப்பற்றிய ஸ்டார் குரூப் 5 வருடத்திற்கான டிவி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு ஒப்பந்தத்தை 16,347.50 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது.

டாடா ஐபிஎல் 2022

டாடா ஐபிஎல் 2022

கடந்த மாதத்தில் டாடா ஐபிஎல் 2022ன் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டது. டாடா ஐபிஎல் 2022ன் அறிக்கைகளின் படி பார்வையாளர்கள் எண்ணிக்கை 33 சதவீதம் சரிந்த கரணத்தால் ஒளிபரப்பு ஒப்பந்தம் விலை பெரிய அளவில் குறையும் எனக் கூறப்படுகிறது.

74 போட்டிகள்
 

74 போட்டிகள்

ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 60 போட்டிகளுக்கான ஒப்பந்தம் மட்டுமே நடந்தது, ஆனால் தற்போது 74 போட்டிகள் உள்ளன. போட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் விளம்பரம் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் அதிகரிக்கும், அதோடு பல விளம்பரதாரர்களைப் புதிதாக இணைக்க முடியும்.

டிஜிட்டல் சந்தா

டிஜிட்டல் சந்தா

மேலும் தற்போதைய டிரெண்டாக ஐபிஎல் என்பது டிஜிட்டல் சந்தாக்களை ஈர்க்கும் இயந்திரமாக உள்ளது. ஹாட் ஸ்டார் இந்தியா-வுக்குத் தனது உலகளாவிய வருவாயில் 30 சதவீத வருவாய் ஐபிஎல் மூலம் கிடைத்துள்ளது. இது இத்துறையில் இருக்கும் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்குப் பெரும் வாய்ப்பாக இருக்கும்.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

2023ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தில் பங்கு பெறும் நிறுவனங்களின் பட்டியல்.

அமேசான்
டிஸ்னி ஸ்டார்
ரிலையன்ஸ் வாய்காம் ஸ்போர்ட்ஸ்18
ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்
சோனி குரூப் கார்ப்
டிரீம் ஸ்போர்ட்ஸ் இன்க்
ஆல்பபெட் இன்க் (கூகுள்)
சூப்பர்ஸ்போர்ட், தென்னாப்பிரிக்கா
ஆப்பிள் இன்க்

ஏலம்

ஏலம்

இதேபோல் அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்றவாறு 4 பிரிவுகளாகப் போட்டிகளின் ஒளிப்பரப்பை ஏலம் விட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்யுள்ளது. இதேபோல் டிஜிட்டல் மற்றும் டிவி உரிமைகள் எனத் தனித்தனியாகவும், இந்தியா மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தைத் தனித்தனியாகவும் ஏலம் விட ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IPL Broadcasting Auction: Next Big is in Off field, 3 big companies into action

IPL Broadcasting Auction: Next Big is in Off-field, 3 big companies into action அடுத்த ஐபிஎல் கிரவுண்டை விட, கிரவுண்டுக்கு வெளியில் தான் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது..!

Story first published: Tuesday, June 7, 2022, 21:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.