இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்க தயாராகும் உலக நாடுகள்


இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுக்கவுள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி உலக நாடுகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்க தயாராகி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

6 பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்க தயாராகும் உலக நாடுகள்

அடுத்த 6 மாதங்களுக்கு நாட்டை நிலைநிறுத்துவதற்கு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்த கடினமான நேரத்தில் நமது நாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் இந்த நாடுகளின் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பல பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

களமிறங்கம் ஐ.நா சபை

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்க தயாராகும் உலக நாடுகள்

எதிர்வரும் 9ஆம் திகதி உலகம் முழுவதும் பகிரங்க வேண்டுகோள் விடுக்க ஐக்கிய நாடுகள் சபை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவி கோருகின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், உணவு, விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நான்கு மாத காலத்திற்கு 48 மில்லியன் டொலர்களை வழங்க திட்டமிட்டுள்ளனர்.

எமக்கு கடனும் உதவியும் வழங்கும் நாடுகள் வரிசைநில் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. எப்பொழுதும் எமக்கு விசுவாசமாக இருந்த இந்நாடுகளுடனான உறவுகள் தற்போது முறிந்துள்ளன. அந்த உறவுகளை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.