என்ன ஒரு ஆனந்தம்… விவகாரத்து வெற்றியை விருந்து வைத்து கொண்டாடிய நடிகர் ஜானி டெப்… பல லட்சங்களை அளித்து மகிழ்ச்சி..!

முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட்டிற்கு எதிரான வழக்கில் பெற்ற வெற்றியை கொண்டாடிய நடிகர் ஜானி டெப், இங்கிலாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் 48 லட்ச ரூபாயை செலவழித்து விருந்து வைத்துள்ளார்.

பர்மிங்ஹாமில் உள்ள வாரணாசி என்ற அந்த உணவகத்தில், 21 நண்பர்களுடன் உணவருந்திய அவர், இந்திய உணவுகளை சாப்பிட்டதுடன் மது வகைகளையும் அருந்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

3 மணி நேரத்திற்கு மேல் உணவகத்தில் செலவிட்டதுடன், உணவை பார்சலும் வாங்கிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், அங்கு உணவு பரிமாறியவர்களுக்கு அவர் அதிக தொகையை அன்பளிப்பாக வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.