மீண்டும் சூர்யாவுடன் கூட்டணி… உறுதி செய்த கமல்… மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Tamil Actor kamal Confirmed Join With Surya on Next Movie : தமிழ்சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்று வரும் படம் விக்ரம். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகர் சூர்யாவுடன் தான் ஒரு முழுநீள படத்தில் நடிக்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இயக்கியுள்ள படம் விக்ரம். 1986-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம், 2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாக கைதி ஆகிய இரண்டு படங்களையும் இணைத்து வித்தியாசமாக திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் கமல்ஹாசனுடன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பொன் வினோத் ஜோஸ், உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் நடித்திருந்த நிலையில், கடைசி 3 நிமிடங்களில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் வந்து அதகளம் செய்திருப்பார். இதன் மூலம் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கு லீடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் சூர்யா அந்த படத்தில் பெரிய வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விக்ரம் படத்தில் வெற்றி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பேசும் கமல்,

கடைசி 3 நிமிடங்கள் மட்டுமே வந்து திரையரங்கை அதிர வைத்த என் அன்பு தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்சிவிடலாம் என்று இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் விக்ரம் படத்தில் சிறப்பு தொற்றத்தில் வந்த சூர்யா அடுத்து கமல்ஹாசனுடன் முழுநீள படத்தில் நடிக்க உள்ளதும் இந்த அறிவிப்பை கமல்ஹாசனே வெளியிட்டுள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் இயக்குநர்  யார் என்றும், இந்த படம் விக்ரம் படத்தின் அடுத்த பாகமா அல்லது, வேறு கதையாக என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.