டன் கணக்கில் தங்கம்.. வரலாற்று சாதனை..!

என்ன தான் கிரிப்டோகரன்சி, என்எப்டி எனப் பல புதிய முதலீடுகள் வந்தாலும் தங்கத்தை எப்போதும் இந்தியர்கள் விட்டுத்தரப்போவது இல்லை என்பதைத் தொடர்ந்து உணர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மே மாதம் நடந்ததைப் பார்த்தீங்கனா ஆடிப்போயிருவீங்க..

கல்விக்கடனை குறைந்த வட்டியில் கொடுக்கும் 10 வங்கிகள் இவைதான்!

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

மே மாதம் இந்தியாவின் தங்கம் இறக்குமதி அளவு எப்போதும் இல்லாத வகையில், ஒரு வருட ஒப்பீட்டில் 677 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஒரு வருட அடிப்படையில் பதிவான மிகப்பெரிய வளர்ச்சியாகும்.

அக்ஷய திருதியை, திருமண சீசன்

அக்ஷய திருதியை, திருமண சீசன்

இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியமான காரணம் மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்ட இந்துக்கள் மற்றும் ஜெயின் மக்களின் முக்கியப் பண்டிகையான அக்ஷய திருதியை மற்றும் திருமண சீசன் காரணமாகத் தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை
 

வர்த்தகப் பற்றாக்குறை

உலகின் இரண்டாவது பெரிய தங்க இறக்குமதி நாடான இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் தொடர்ந்து அதிகமாக இருக்கும் காரணத்தால் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இதேவேளையில் இந்தியாவின் அதிகப்படியான தங்க இறக்குமதி மூலம் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும், ரூபாய் மதிப்பு சரிய வாய்ப்பு உள்ளது.

ஜூன் மாதம்

ஜூன் மாதம்

தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் ஜூன் மாதத்தில் தங்கம் இறக்குமதி 60 டன்களுக்கும் கீழே குறையக்கூடும் என்று சந்தை கணிப்புகளால் கூறப்படுகிறது.

101 டன் தங்கம் இறக்குமதி

101 டன் தங்கம் இறக்குமதி

மே மாதத்தில் இந்தியா சுமார் 101 டன் தங்கத்தை இறக்குமதி செய்த நிலையில், இது முந்தைய ஆண்டின் மே மாதத்தில் 13 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் டாலர் மதிப்பில் மே 2021ல் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 678 மில்லியன் டாலராக இருந்த நிலையில் மே 2022ல் 5.83 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

MCX சந்தை விலை

MCX சந்தை விலை

இதேவேளையில் மே மாதத்தின் 10 கிராம் கோல்டு பியூச்சர்ஸ்-ன் மதிப்பு 49,572 ரூபாயாக இருந்தது, இது கடந்த 3 மாதத்தில் குறைவான அளவு. இந்நிலையில் MCX சந்தையில் இன்று 10 கிராம் தங்கத்தின் விலை 0.30 சதவீதம் சரிந்து 50,716.00 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 1.13 சதவீதம் சரிந்து 61,597.00 ரூபாயாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India imports 101 tonnes of gold in may, 677 percent growth highest ever year-on-year surge

India imports 101 tonnes of gold in may, 677 percent growth highest ever year-on-year surge டன் கணக்கில் தங்கம்.. வரலாற்று சாதனை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.