Realme GT Neo 3T: டெக் சந்தையில் நுழைந்த பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய போன்!

Realme GT Neo 3T: பல நாள் காத்திருப்புக்குப் பிறகு ரியல்மி தனது புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி போனை அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் நடுநிலை வகையில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தையில் கால் பதித்துள்ளது.

எனவே, விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் புதிய ரியல்மி போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Realme 9i 5G: ரியல்மி 9ஐ 5ஜி இந்திய வெளியீடு எப்போது?

ரியல்மி ஜிடி நியோ 3டி எதிர்பார்ப்பு விலை (Realme GT Neo 3T Expected price)

உலக டெக் சந்தையில் இந்த போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டேரேஜ் மெமரி வேரியன்ட் விலை 469.99 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 32,999 என்ற விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் ரியல்மி ஜிடி நியோ 3டி அம்சங்கள் (Realme GT Neo 3T Expected Specifications)

Realme GT Neo 3T ஸ்மார்ட்போனில் 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.62 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கும். 1080×2400 பிக்சல்கள் கொண்டு இந்த டிஸ்ப்ளே காட்சியளிக்கும். இதன் பாதுக்காப்புக்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்படலாம்.

இந்த போனை திறன்மிக்கதாக மாற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 (Qualcomm Snapdragon 870 5G) 5ஜி சிப்செட் நிறுவப்படலாம். மேலும், இதன் ரேம் 8ஜிபி என்ற அளவில் இருக்கும். மேலும், 128ஜிபி / 256ஜிபி என இரண்டு வகைகளில் ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்படும்.

Poco C40: ஜூன் 16 அன்று தடம்பதிக்கும் போக்கோவின் 6,000mAh பேட்டரி போன்!

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி UI 3.0 ஸ்கின் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயங்கும். கேமரா அமைப்பைப் பொருத்தவரை பின்புறம் 3 கேமராக்கள் கொண்ட அமைப்பும், முன்புறம் ஒரு செல்ஃபி கேமராவும் இருக்கும்.

Moto G82 5G: அதிக சிறப்பம்சங்கள் கொண்ட பட்ஜெட் பிரண்ட்லி மோட்டோ 5ஜி போன் இன்று முதல்!

அதில், பின்பக்கம் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். செல்பிக்காக 16 மெகாபிக்சல் லென்ஸ் டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் கொடுக்கப்படும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

டிஸ்ப்ளே பகுதியில் வரும் கைரேகை சென்சார், டால்பி அட்மாஸ் தரத்திலான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வைஃபை, ப்ளூடூத் என பல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.

ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்படும். மேலும், 36 நிமிடங்களின் போனை முழுவதுமாக சார்ஜ் செய்யும் திறன்கொண்ட 80W பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி போனில் இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.