பப்பாளி அனைவராலும் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். இந்த பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. பழங்களைத் தவிர, பப்பாளிச் செடியில் அதிகம் உட்கொள்ளப்படுவது பப்பாளி இலை.
பப்பாளி இலைச்சாறு இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான மருந்து. இதில் பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன, இது செரிமானத்திற்கு உதவுகிறது, வீக்கம் மற்றும் பிற செரிமான கோளாறுகளைத் தடுக்கிறது. இதில் உள்ள ஆல்கலாய்டு கலவை’ பொடுகு மற்றும் வழுக்கைக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது.
பப்பாளி இலைகளில் அதிக அளவு வைட்டமின் ஏ, சி. ஈ, கே மற்றும் பி உள்ளன.
பப்பாளி இலையில் தயாரிக்கப்படும் தேநீர், சாறுகள் மற்றும் மாத்திரைகள் பெரும்பாலும் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
பப்பாளி இலை சாற்றின் ஆரோக்கிய நன்மைகள் இங்கே.
டெங்கு அறிகுறிகளை குணப்படுத்த
பப்பாளி இலைச் சாறு பொதுவாக, டெங்கு காய்ச்சலுடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. டெங்குவின் பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், சோர்வு, தலைவலி, குமட்டல், தோல் வெடிப்பு மற்றும் வாந்தி ஆகியவை அடங்கும். சில கடுமையான சந்தர்ப்பங்களில், இது பிளேட்லெட் அளவைக் குறைக்கலாம், இது இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்திற்கு வழிவகுக்கும்.
தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை இல்லை, ஆனால் பப்பாளி இலைச்சாறு என்பது பொதுவாக பயன்படுத்தப்படும் சிகிச்சை முறைகளில் ஒன்றாகும்.
டெங்குவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களை உள்ளடக்கிய மூன்று ஆய்வுகளில், பப்பாளி இலைச் சாறு இரத்தத் தட்டுக்களின் அளவைக் கணிசமாக அதிகரிக்க உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த
பப்பாளி இலைச்சாறு, பெரும்பாலும் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கும், இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதற்கும் இயற்கை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பப்பாளி இலையில், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும் விளைவுகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலம் இது உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற செரிமான அறிகுறிகளைப் போக்க பப்பாளி இலை டீ பயன்படுத்தப்படுகிறது. பப்பாளி இலையில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இது மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் உதவுகிறது.
இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் முயற்சி செய்வதில் எந்தப் பாதிப்பும் இல்லை.
அழற்சி எதிர்ப்பு
தசை வலிகள் மற்றும் மூட்டு வலி உள்ளிட்ட உள் மற்றும் வெளிப்புற அழற்சி நிலைகளுக்கு சிகிச்சை அளிக்க பப்பாளி இலை தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது.
பப்பாளி இலை சாறு கீல்வாதத்துடன் கூடிய எலிகளின் பாதங்களில் வீக்கத்தை கணிசமாகக் குறைப்பதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முடி வளர்ச்சிக்கு
பப்பாளி இலைச் சாற்றை உச்சந்தலையில் தடவினால் முடி வளர்ச்சி மற்றும் முடி ஆரோக்கியம் அதிகரிக்கும். உடலில் அதிகளவு ஆக்ஸிஜனேற்ற அழுத்தம்’ முடி உதிர்தலுக்கு பங்களிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவை உட்கொள்வது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தணிக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்.
பப்பாளி சாறு’ அண்டி-ஃபங்கல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது மலாசீசியா எனப்படும் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையைக் கட்டுப்படுத்தும்.
ஆரோக்கியமான சருமம்
பப்பாளி இலையை, சருமத்தில் தடவினால் மென்மையான மற்றும் சுத்தமான சருமம் கிடைக்கும். இது பாப்பைன் எனப்படும் புரதத்தை கரைக்கும் நொதியைக் கொண்டுள்ளது, இது ஒரு எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்பட்டு, தூசி மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. முகப்பரு ஏற்படுவதைக் குறைக்கவும் உதவுகிறது.
புற்று நோய் எதிர்ப்பு
பப்பாளி இலை பாரம்பரிய மருத்துவ நடைமுறைகளில் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதை உறுதிப்படுத்த இன்னும் ஆராய்ச்சி தேவை. சோதனைக் குழாய் ஆய்வுகளில் பப்பாளி சாறு, புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்திவாய்ந்த திறனை காட்டியுள்ளது. ஆனால் மனித அல்லது விலங்கு ஆய்வுகள் இந்த கண்டுபிடிப்புகளை பிரதிபலிக்கவில்லை.
பப்பாளி இலை சாறு செய்வது எப்படி
சாறு தயாரிக்க, உங்களுக்கு சில புதிய பப்பாளி இலைகள் மற்றும் தண்ணீர் தேவை.
இலையின் தண்டுகளை முதலில் வெட்டவும். இப்போது இலையை சிறிதாக நறுக்கவும். இலைகளை பிளெண்டரில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். பப்பாளி இலை சாறு ரெடி.
டெங்குவின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒருவர் பகலில் 100 மில்லி பப்பாளி இலைச்சாற்றை மூன்று பகுதிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
சாறு சுவையாக இருக்க, நீங்கள் சிறிது உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“