பெங்களூரு : மைசூரில் வரும் 21ல் நடக்கவுள்ள யோகா நிகழ்ச்சியில், பிரதமருடன் 15 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டின் அமுத பெருவிழாவை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், இம்முறை சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு வரும் 21ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.ஏற்பாடுகள் குறித்து மைசூரு மாவட்ட உயர் அதிகாரிகளுடன், முதல்வர் பசவராஜ் பொம்மை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அதிகபட்சமாக 15 ஆயிரம் பேர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யும்படியும், 13ம் தேதிக்குள் அவர்களை தேர்வு செய்யும்படியும் உத்தரவிட்டார்.பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியபடி, சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள 14 குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படும்படியும் முதல்வர் அறிவுறுத்தினார்.
பெங்களூரு : மைசூரில் வரும் 21ல் நடக்கவுள்ள யோகா நிகழ்ச்சியில், பிரதமருடன் 15 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர்.இந்தியாவின் 75வது சுதந்திர ஆண்டின் அமுத பெருவிழாவை ஒட்டி, மைசூரு அரண்மனை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.