கோவில் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், காரைக்காலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருப்பட்டினம் ஆயிரம் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று (ஜூன் 8 ) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.