Al-Qaeda warning suicide bombing attack: நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியா மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூன் 6 அல்கொய்தா வெளியிட்ட கடிதத்தில், நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் நாங்கள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த எச்சரிக்கை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் உளவுத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, உஷார் நிலையில் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 27 ஆம் தேதி ஆன்லைன் செய்தி சேனலின் விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளர் நுபர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரம் விஸ்வரூபம் அடைய, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. ஆனால், ஆளும் கட்சியினரின் சர்ச்சை கருத்துக்கு, பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அல்கொய்தா கடிதத்தில் கூறியிருப்பதாவது, இந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவை ஆக்கிரமித்துள்ளனர். நபிகளின் கண்ணியத்தை காப்பதற்காக நாம் போராட வேண்டும். மற்றவர்களும் நம் நபியின் கண்ணியத்திற்காக போராடி உயிரிழக்க வேண்டும். அதேசமயம், நபியை அவமதிப்பவர்களைக் கொல்ல வேண்டும்
நமது உடலிலும், நம் குழந்தைகளின் உடலிலும் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, நமது நபியை இழிவுபடுத்தோர் அனைவரையும் கொல்ல வேண்டும். டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், குஜராத்தை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் தங்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்
அவர்கள் தங்களுடைய வீடுகளிலோ அல்லது ராணுவ முகாம்களிலும் தஞ்சம் அடையக்கூடாது என குறிப்பிட்டிருந்தனர்.
மிரட்டல் கடிதம் குறித்து முதலில் ஆய்வு செய்த மத்திய அமைப்புகள், அனைத்து மாநில காவல் துறையினரும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டது.
இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தபடும் என அல்கொய்தா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.