5 நாட்களில் வசூலில் புதிய சாதனைப் படைத்த விக்ரம்.!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

 இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஜூன் 3-ல் வெளியான விக்ரம் படம் அட்டகாசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெகட்டிவ் விமர்சனங்களே, இல்லாதவகையில் தான் படம் வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இப்படம் அமோக வெற்றியை, அதாவது லாபத்தைக் கொடுத்துள்ளது. படம் கொடுத்த வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜிக்கு கமலஹாசன் கார் பரிசளித்தார். மேலும் உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசு கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

இந்நிலையில், விக்ரம் படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டையை நடத்தி உள்ளது. 5 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.