கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. மீண்டும் வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி!

இந்திய ரிசர்வ் வங்கியானது இன்று அதன் பணக் கொள்கை கூட்டத்தில், ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.90.% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென ரெப்போ விகிதத்தினை 40 அடிப்படை புள்ளிகளை உயர்த்திய ரிசர்வ் வங்கி, தொடர்ந்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

இது தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை வீழ்ச்சியா.. சாமானியர்களுக்கு கிடைத்த சரியான வாய்ப்பு தான்.. இனியும் விலை குறையுமா?

என்னென்ன விகிதங்கள் வெளியீடு?

என்னென்ன விகிதங்கள் வெளியீடு?

ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 4.90% ஆகவும்,. இதோடு ஸ்டாண்டிங் டெபாசிட் (SDF) மற்றும் MSF விகிதங்களும் முறையே 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 4.65% ஆகவும், 5.15% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது,

பணவீக்க அச்சம்

பணவீக்க அச்சம்

பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கினை விட தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகின்றது. இதன் காரணமாக வளர்ந்து வரும் சந்தைகளில் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்திய பொருளாதாரம் பெரியளவில் பிரச்சனையை எதிர்கொள்ளாமல் நிலைத்து நிற்கிறது. படிப்படியாக வளர்ச்சியினை மீட்க தொடங்கியுள்ளோம், ஆக பொருளாதார வளர்ச்சியினை மீட்டெடுப்பதில் ரிசர்வ் வங்கி தீவிர முனைப்புடன் இருந்து வருகின்றது. ஆக அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

பணவீக்க எதிர்பார்ப்பு
 

பணவீக்க எதிர்பார்ப்பு

உக்ரைன் ரஷ்யா போர் உலக வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. பணவீக்கம் என்பது வேகமாக அதிகரித்து வருகின்றது. எனினும் உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6% மேலாகவே இருக்கும். நீடித்த உயர்ந்த பணவீக்க எதிர்பார்ப்புகளை குறைக்கலாம் என சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பாதிப்பு என்ன?

பாதிப்பு என்ன?

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பினால் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் விரைவில் அதிகரிக்கலாம். குறிப்பாக வீட்டுக் கடன், வாகன கடன் போன்றவற்றிற்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இதனால் மாத மாதம் செலுத்தும் தவணை தொகையானது அதிகரிக்கலாம். இது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பாதிப்பினை ஏற்படுத்தலாம். ஏற்கனவே பணவீக்கத்தினால் அவதிப்படும் வாடிக்கையாளார்கள் தற்போது இன்னும் கூடுதல் சுமைக்கு தள்ளப்படலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI hikes the repo rate by 50 basis points to 4.90

Reserve Bank of India raised the repo rate by 50 basis points to 4.90% in its monetary policy meeting today.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.