மாஸ்க் ஆதார் அட்டை என்றால் என்ன? எப்படி பதிவிறக்கம் செய்வது?

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமானது என்பதும் அனைவருக்கும் 12 இலக்க ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த ஆதார் அட்டை என்பது ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, பான் அட்டை உள்பட அனைத்திலும் இணைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த ஆதார் அட்டையை யாரேனும் தவறாக பயன்படுத்தி விடாமல் இருப்பதற்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. அந்த வகையில் ஆதார் அட்டையின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டை என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அடுத்த சர்ச்சையில் சிக்கும் விஷால் கார்க்.. நினைவிருக்கா.. ஒரே ஜூம் காலில் 900 பேரை பணி நீக்கம்!

மாஸ்க் ஆதார்

மாஸ்க் ஆதார்

இந்த வசதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி இருந்தாலும் இன்னும் பலருக்கு தெரியாது என்பதால் இது குறித்து தற்போது பார்ப்போம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு திறப்பது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை என்பது அவசியம் என்ற நிலையில் இந்த ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க முழு எண்களையும் எந்த நிறுவனத்திலும் பகிர்ந்து பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 இலக்கங்கள்

4 இலக்கங்கள்

அதற்கு பதிலாக ஆதார் அட்டையில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டும் பதிவு செய்தால் போதும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) இது குறித்த தகவலை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு
 

பாதுகாப்பு

இந்த மாஸ்க் ஆதார் அட்டை முதல் 8 எண்களை மறைத்து கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டுவதால் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. முதல் எட்டு எண்களுக்கு பதிலாக xxxx xxxx போன்ற குறியீடுகள் மட்டும் இருக்கும் என்பதும் கடைசி நான்கு இலக்க எண்கள் மட்டுமே வெளியே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டவுன்லோடு

டவுன்லோடு

இந்த மாஸ்க் ஆதார் அட்டையை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மாஸ்க் ஆதார் அட்டையை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

* மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையை UIDAI வலைத்தளம் மூலம் டவுன்லோடு செய்ய வேண்டும்

* எனவே myaadhaar.uidai.gov.in க்குச் சென்று ‘Login’ செய்ய வேண்டும். அதன் பின் உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை கொடுத்த பிறகு , ஓடிபி என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

* இதனையடுத்து உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபியை பதிவு செய்து லாகின் செய்த பிறகு ‘Services’ என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் ‘Download Aadhaar’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

* அதன்பின் Review your Demographics Data என்ற பிரிவின் கீழ் உள்ள ‘Do you want a masked Aadhaar?’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* அதன் பிறகு டவுன்லோடு என்பதை கிளிக் செய்தால் புதிய மாஸ்க்ட் ஆதார் கார்டை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த ஆதார் அட்டை நமக்கு PDF வடிவத்தில் கிடைத்துவிடும்.

பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட்

இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டை பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் கேபிடல் எழுத்துக்களிலும், பிறந்த ஆண்டையும் பதிவு செய்வதன் மூலம் PDF மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையை ஓப்பன் செய்து பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What Is A Masked Aadhaar And Why Do You Need It?

What Is A Masked Aadhaar And Why Do You Need It? | மாஸ்க் ஆதார் அட்டை என்றால் என்ன? எப்படி பதிவிறக்கம் செய்வது?

Story first published: Wednesday, June 8, 2022, 16:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.