இந்தோனேஷியாவின் ரியவ் மாகாணத்தில் உள்ள கசங் குலிம் உயிரியல் பூங்காவை சுற்றிப்பார்க்க ஹசன் அரிபின் என்ற இளைஞர் திங்களன்று சென்றார்.
‘ஒராங்குட்டான்’ எனும் ஆசிய வகை மனித குரங்கு அடைத்து வைத்திருந்த கூண்டின் அருகே சென்ற அந்த இளைஞர் தடுப்பு வெளியை தாண்டி கூண்டுக்கு அருகில் சென்றார்.
இளைஞரின் செய்கையால் ஆத்திரம் அடைந்த ஐந்து மனித குரங்கு அவரின் டி-சர்ட்டை பிடித்து இழுத்தது.
இதனால் மிரண்டு போன அந்த இளைஞரை காப்பாற்ற அவரது நண்பர் கூண்டருகே சென்றார் அவரையும் பிடித்து இழுக்க முயன்ற குரங்கிடம் இருந்து லாவகமாக தப்பிய அவரது நண்பர் ஹசனை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டார்.
ஒருகட்டத்தில் அவரது காலை இறுக பிடித்துக்கொண்ட குரங்கிடம் ஹசன் கடிவாங்க நேர்ந்தது இதனால் அலறித்துடித்த அந்த இளைஞரை நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் அந்த குரங்கிடம் இருந்து மீட்டனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த மற்றொரு பார்வையாளர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
— san (@sundaykisseu) June 7, 2022
இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அந்த கூண்டுக்கு அருகே எச்சரிக்கை பலகை வைத்திருந்ததையும் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர் உள்ளே எகிறி குதித்து சென்றதாகவும் குரங்கை ஆத்திரமூட்டும் வகையில் எட்டி உதைப்பது போன்ற செய்கையில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறினர்.
here’s the rest😭 pic.twitter.com/UFZYfjYHfA
— san (@sundaykisseu) June 7, 2022
மேலும், அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாவலர் மதிய உணவுக்காக சென்றிருந்த நேரத்தில் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதாக கூறிய அதிகாரிகள் அதுபோன்ற நேரங்களில் மாற்று ஏற்பாடு செய்யவும் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
ஓராங்குட்டான் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் விலங்கு இல்லை என்ற போதும் அந்த மனித குரங்கிடம் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.