மக்களும், பொருளாதாரம் கடந்த 3 வருடமாகப் பெரும் சுழற்சியில் மாட்டிக்கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
அமெரிக்கா சீனா வர்த்தகப் போரில் துவங்கி, கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள், ரஷ்யா – உக்ரைன் போர், எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று, சப்ளை செயின் பாதிப்பு, பணவீக்கம், நாணய மதிப்புச் சரிவு, மத்திய வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு, கடைசியாக டெக் பங்குகள் சரிவு எனச் சுத்தி சுத்தி உலக நாடுகளின் பொருளாதாரத்தைக் காவு வாங்கி வருகிறது.
இந்த நிலையில் பொருளாதாரம் என்னும் இன்ஜின் இயங்க எண்ணெய் ஊற்றும் முக்கிய அமைப்பு சர்வதேச பொருளாதாரம் குறித்து முக்கியமான கணிப்பை வெளியிட்டு உள்ளது.
மாஸ்க் ஆதார் அட்டை என்றால் என்ன? எப்படி பதிவிறக்கம் செய்வது?
அமெரிக்கா டூ மங்கோலியா
அமெரிக்கா முதல் மங்கோலியா வரையில் உலகின் முன்னணி நாடுகள் அனைத்தும் விலைவாசி உயர்வால் தவித்து வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சி அளவீட்டை அடுத்தடுத்து குறைத்து வருகிறது.
OECD அமைப்பு
இதன் எதிரொலியாகப் பொருளாதார மேம்பாடு மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்பான OECD 2022ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்துள்ளது. OECD அமைப்பின் இந்த அறிவிப்பும் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதாரம்
சர்வதேச பொருளாதாரத்தின் வளர்ச்சி 2022ஆம் ஆண்டில் 4.5 சதவீதமாக இருக்கும் என OECD அமைப்பு 2021 டிசம்பர் மாதம் கணித்தது. ஆனால் பிப்ரவரி மாதம் துவங்கிய ரஷ்யா உக்ரைன் போர் மொத்த சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது.
வெறும் 3 சதவீதம்
இதன் வாயிலாகத் தற்போது OECD அமைப்பு சர்வதேச பொருளாதாரத்தின் வளர்ச்சி 2022ஆம் ஆண்டில் 1.5 சதவீதத்தைக் குறைத்து 3 சதவீதம் வரையில் மட்டுமே வளர்ச்சி அடையும் எனக் கணித்துள்ளது.
முக்கியக் காரணம்
ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர், சீனாவில் அதிகரித்த கொரோனா தொற்றும் மூலம் முக்கிய வர்த்தக நகரங்கள், துறைமுகங்கள் கொரோனா தொற்று அலையில் இருந்து மீண்டு வரும் நாடுகளுக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது என OCED அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக வங்கி
செவ்வாய்க்கிழமை உலக வங்கி சர்வதேச பொருளாதாரத்தின் வளர்ச்சி 2022ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த நிலையில் தற்போது 2.9 சதவீதமாகக் குறைத்துள்ளது. உலக வங்கியைத் தொடர்ந்து OCED அமைப்பும் வளர்ச்சி அளவீட்டை குறைத்துள்ளது சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
OECD slashes global Economy growth to 3 percent; Amid Ukraine war, China zero-Covid policy
OECD slashes global Economy growth to 3 percent; Amid Ukraine war, China zero-Covid policy சமஸ்தானமே சொல்லிடுச்சா.. அப்போ பொருளாதாரம் அவ்வளவு தான் போலயே..?!