Tirupati Darshan Tickets: தரிசன டிக்கெட்டுகள் காலி – ஏழுமலையான் பக்தர்கள் ஷாக்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ளது, திருப்பதி
ஏழுமலையான் கோவில்
. இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் விற்று தீர்ந்தன. தற்போது தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.

அனைத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். எனவே இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை அடுத்து தேவஸ்தான அதிகாரிகளும் இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.