விதிமுறை மீறி கட்டியமூன்று மாடிகள் இடிப்பு| Dinamalar

ஆனேக்கல் : விதிமுறையை மீறி கட்டிய கட்டடத்தில் மூன்று மாடியை, நீதிமன்ற உத்தரவுப்படி தாசில்தார் இடித்து அகற்றினார்.பெங்களூரு ஊரகம் ஆனேக்கல் அருகே உள்ள சர்ஜாபுரா அருகே தொம்மசந்திராவை சேர்ந்தவர் லத்தீப், 45. இவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஆனேக்கல் பகுதியில் மூன்று மாடிக்கு மேல் கட்டடங்கள் கட்டக்கூடாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

‘ஆனால், தொம்மசந்திராவை சேர்ந்த முனிரெட்டி என்பவர், விதிமுறைகளை மீறி ஆறு மாடி கட்டடம் கட்டி வருகிறார். இதனால், அக்கம் பக்கத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு மீதான விசாரணையின் போது, ‘ஆனேக்கல் பகுதியில் மூன்று மாடிக்கு மேல் கட்டடங்கள் கட்ட அனுமதி இல்லை. இதனால், அந்த கட்டடத்தில் மூன்று மாடிகளை இடிக்க வேண்டும்’ என தாசில்தாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இதன்படி, ஆனேக்கல் தாசில்தார், கட்டடத்தின் மூன்று மாடிகளை இடிக்கும்படி கட்டட உரிமையாளர் முனிரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசுக்கு முனிரெட்டி எந்த பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து ஆனேக்கல் தாசில்தார், நேற்று முன்தினம் போலீசாருடன் தொம்மசந்திரா சென்றார்.விதிமுறையை மீறி கட்டப்பட்ட மூன்று மாடியை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு கட்டட உரிமையாளர் முனிரெட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.நீதிமன்ற உத்தரவுப்படி இடிப்பதாக போலீசார் தெரிவித்தனர். நவீன இயந்திரத்தின் உதவியுடன் மூன்று மாடிகள் இடித்து அகற்றப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.