மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவை ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

1979 ஆம் ஆண்டு இலக்கம் 61 இன் கீழான அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் ,இரண்டாவது சரத்தில் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பில் இன்று (08) மாலை இதுதொடர்பாக அறிவித்துள்ளார்.

அரசாங்க கூட்டுத்தாபனம் , திணைக்களம் உள்ளூராட்சி மன்றம் அல்லது கூட்டுறவுச் சங்கங்களினால் நியோகிக்கப்படும் மின் விநியோகம் மற்றும் வைத்திய சாலை சேவை பொது மக்களின் வழமையான வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அத்தியாவசியம் என்பது இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்திய சாலை, பராமறிப்பு நிலையம் மருத்துவ நிலையம் மற்றும் ஏனைய பொதுவான நிறுவகங்களினால் நோயாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சிகிச்சை மற்றும் சேவைகள் வைத்தியசாலை சேவைகளுக்கு உட்பதாகும்.

(1. மின்சாரம் வழங்கல்
2. வைததிய சாலைகள் நேர்சிங் ஹோம் கள் இ மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களினால் நோயாளர் களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில்
மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில்பங்களிப்பு.)

அதிவிஷேட வர்த்தமானி

http://documents.gov.lk/files/egz/2022/6/2283-33_T.pdf

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.