ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், பண வீக்கம் மேலும் அதிகரிக்கும்- நிபுணர்கள் கணிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி இன்று அதாவது ஜூன் 8 அன்று ரெப்போ விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தி 4.80 சதவீதமாக உயர்த்தும் என்றும், நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை முந்தையதை விட 6 சதவீதத்திற்கு மேல் உயர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஜூன் மாதத்தில் வட்டி விகித உயர்வுகள் இருக்கும் என்று கூறினார்.

ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் ஜூன் 6 துவக்கம்.. ‘இந்த’ மாற்றங்கள் எல்லாம் கட்டாயம் நடக்குமா..?!

பணவீக்கம் பல மாதங்களாக அதிகமாக இருப்பதால், ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழு அமைத்து, வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து ஆலோசித்தது. ஜூன் மாதத்தில் சக்திகாந்த தாஸ் கூறியது போல், கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்றே இந்த குழுவும் முடிவு செய்தது.

பணவீக்கம்

பணவீக்கம்

ஏப்ரல் மாதத்தில் CPI என்று கூறப்படும் இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதத்தை எட்டியது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி. ஜனவரி முதல், இது 6 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்

கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ்

இதுகுறித்து கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸின் மூத்த பொருளாதார நிபுணர் சுவோதீப் ரக்ஷித் அவர்கள் கூறியபோது ஜூன் மாத நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 40 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

பாங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்
 

பாங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்

இதுகுறித்து பாங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் கூறியபோது, ‘சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் 7.1 சதவீதமாக இருக்கும் என்றும், நடப்பு நிதியாண்டில் CPI அடிப்படையிலான பணவீக்கம் சராசரியாக 6.8 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கணிப்பு

கணிப்பு

மேலும் பணவீக்க அழுத்தத்தின் சமீபத்திய அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கக் கணிப்பை ரிசர்வ் வங்கி 6 சதவீதத்திற்கு மேல் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பு பிப்ரவரியில் 4.5 சதவீதமாக இருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்திலேயே 5.7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

6.5 சதவீத பணவீக்கம்

6.5 சதவீத பணவீக்கம்

பாங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் கருத்தின்படி, ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கத்தை 6.5 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளது. அடுத்த வாரம் அல்லது ஆகஸ்டில் பணவீக்கக் கணிப்பீட்டை ரிசர்வ் வங்கி மீண்டும் திருத்த வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி பணவீக்கம் விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், பணவீக்க விகிதத்தை உயர்த்துவதையும் பணப்புழக்கத்தை இயல்பாக்குவதையும் சரியாக செய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் கருத்தின்படி, ரிசர்வ் வங்கி இந்த மாதம் பாலிசி விகிதத்தை 0.40 சதவீதமும், ஆகஸ்ட் மாதம் 0.35 சதவீதமும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

HDFC வங்கி

HDFC வங்கி

HDFC வங்கியின் ஆய்வின்படி ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை உயர்த்தும் என்றும், இந்த நேரத்தில் ஒரு பெரிய வட்டிவிகித உயர்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், 50 புள்ளிகளுக்கு பதிலாக 25 புள்ளிகள் வரை உயர்வு இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

யெஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்திரனில் பான் இதுகுறித்து கூறியபோது, ரிசர்வ் வங்கி பணவியல் கொள்கையை கடுமையாக்க வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என கூறியுள்ளார். மே மாதத்தில் ரிசர்வ் வங்கி அதன் 40 புள்ளிகள் உயர்த்தியதால் ஜூன் மாதத்தில் 35 புள்ளிகள், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் தலா 25 புள்ளிகள் அதிகரிப்பு என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் கூறியுள்ளார். உலகளாவிய வளர்ச்சியானது பொருட்களின் விலைகளை குறைக்கும் அளவுக்கு மென்மையாக இருக்கும் என்பதால் உள்நாட்டு பணவீக்க சுழற்சிக்கு சில ஆறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ட்ரெஹான் குழுமம்

ட்ரெஹான் குழுமம்

ட்ரெஹான் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சரண்ஷ் ட்ரெஹான் இதுகுறித்து கூறியபோது, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த வாய்ப்புள்ளது என்றும், இது இறுதியில் வங்கிகள் வழியாக கடன் வாங்குபவர்களுக்கு தான் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.

இன்ஃபோமெரிக்ஸ்

இன்ஃபோமெரிக்ஸ்

இதுகுறித்து கிரெடி ரேட்டிங் ஏஜன்ஸி இன்ஃபோமெரிக்ஸ் கூறியபோது, ரெப்போ வட்டி விகிதம் 35-50 புள்ளிகள் வரை உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

டிரஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட்

டிரஸ்ட் மியூச்சுவல் ஃபண்ட்

டிரஸ்ட் மியூச்சுவல் ஃபண்டின் நிதி மேலாளர் ஆனந்த் நெவாடியா அவர்கள் இதுகுறித்து கூறியபோது, ‘ரிசர்வ் வங்கி தற்போது வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பணவீக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது என்றும், நாங்கள் 35-50 புள்ளிகள் உயர்வை எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI to hike repo rates, raise inflation prediction today: Experts

RBI to hike repo rates, raise inflation prediction today: Experts | ரெப்போ விகிதம் அதிகரிப்பால் பணவீக்கம் உயரும்: நிபுணர்கள் கணிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.