இன்று மகாபலிபுரத்தில் நயன்- விக்கி திருமணம்: செல்போன்கள், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா நடித்தார். அந்த திரைப்படத்தில் பணியாற்றும் போது விக்கி, நயன் இருவருக்கும் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக காதலிச்சு வந்த இந்த நட்சத்திர ஜோடி, இன்று இந்து முறைப்படி திருமண பந்தத்தில் இணைகின்றனர்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடியின் திருமணம் இன்று மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், 200-க்கும் மேற்பட்ட சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொள்கின்றனர்.

திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால், பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. விழாவில் கலந்துகொள்பவர்கள் செல்போன் கொண்டுவரவும், வீடியோ எடுக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதே போல், திருமணத்திற்கு வருவோர் அழைப்பிதழ் மட்டுமின்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட பிரத்யேக கோட் ஒன்றையும் சொல்ல வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

திருமணம் நடைபெறும் இடத்திற்கு கடற்கரை வழியாக யாரும் உள்ளே நுழைய கூடாது என்பதற்காகவும், புகைப்படம் எடுத்துவிட கூடாது என்பதற்காகவும்,80க்கு மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணத்துக்கு பத்திரிகையாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப் பட்டிருப்பதால் திருமணத்திற்கு பிறகு வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.

விக்கி – நயன் திருமண பத்திரிக்கையும் வெளியானது. அதில் மணமக்கள் பெயர், இருவரின் பெற்றோர் பெயர் மற்றும் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், திருமணத்தில் கலந்து கொள்ளும் ஆண்கள் அனைவரும் வேட்டி சட்டையிலும் பெண்கள் அனைவரும் பாரம்பரியமான சேலை அணிந்து வரவேண்டும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நயன் – விக்கி திருமணத்தின் அனைத்து நிகழ்வுகளையும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்குவதாக தகவல் கிடைத்துள்ளது. பின்னர், அவை ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு, நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒளிப்பரப்பப்படும் என கூறப்படுகிறது.

இந்த ஜோடியின் திருமண புகைப்படங்களையும் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.