இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை! முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு


பாஜக செய்தி தொடர்பாளர்கள் முகமது நபி குறித்து கூறிய சர்ச்சை கருத்து கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகை கங்கனா ரனாவத் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

நுபூர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இரண்டு பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்கள் முகமது நபி குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவித்தன.

அதன் பின்னர் இந்த விடயம் பூதாகரமாக உருவெடுத்ததைத் தொடர்ந்து, இரண்டு செய்தி தொடர்பாளர்களும் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறும் பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத், பாஜக செய்தி தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை! முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நுபூர் சர்மா அவர் கருத்துகளை கூற உரிமை இருக்கிறது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றன என்பதை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் நீதிமன்றம் செல்லுங்கள். இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதற்காக நாங்கள் அன்றாடம் நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறோம்.

நீங்களும் அதையே செய்யுங்கள். அதைவிடுத்து டான் ஆக முயற்சிக்காதீர்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கே, சீராக இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவுபடுத்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார். 

இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை! முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.