இந்தியாவின் முன்னணி தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Edelweiss Tokio Life நிறுவனத்தின் சிஓஓவாக கெய்சாட் ஹிராமனெக் என்பவர் நியமனம் செய்பவர் செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட அனுபவம் பெற்ற இவரது செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை கவரும் உத்திகள் ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது செயல்பாடுகள், தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த முயற்சிகளை இவர் வழிநடத்திச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்நிறுவனத்தில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த ஹிராமனெக் விரும்புவதாக தெரிகிறது.
போர்டு நிறுவனத்திற்கு ரத்தன் டாடா கொடுத்த Thug Life மொமென்ட்..!
அனுபவம்
பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் உள்பட ஒரு சில நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உத்திகளை வரையறுப்பதில் அவர் முக்கிய பங்கு வகிக்க உள்ளார். அதேபோல் ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் அவந்தா எர்கோ லைஃப் இன்சூரன்ஸ். அவர் பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், மற்றும் சில நிறுவனங்களுடன் கடந்த காலங்களில் தொடர்புடையவர்.
சி.இ.ஓ சுமித் ராய்
Edelweiss Tokio Life Insurance நிறுவனத்தின் எம்டி மற்றும் சி.இ.ஓ சுமித் ராய் அவர்கள் இவரை பற்றி கூறியபோது, ‘எங்கள் பங்குதாரர்களுக்கு மதிப்பை வழங்கக்கூடிய ஒரு நிறுவனமாக நாங்கள் வளர்க்க விரும்புகிறோம். செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பம் இந்த நேரத்தில் ஒரு முக்கிய மதிப்பை வழங்குகிறது என நம்புகிறோம். கெய்சாட் ஹிராமனெக் அவர்களது தலைமையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வணிகத்தை உருவாக்குவதில் எங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
தொழில்நுட்ப திறன்
Edelweiss Tokio Life Insurance நிறுவனத்தின் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ஆயுள் காப்பீட்டாளர் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதைப் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன் எதிர்காலத்தில் செயல்பட நிலை உள்ளது.
வழிகாட்டி
Edelweiss Tokio Life Insurance நிறுவனத்தின் புதிய சி.இ.ஓவாக பதவியேற்கும் ஹிராமனெக் கூறியபோது, ‘வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடிய எதிர்காலத்திற்கு தயாராக உள்ள நிறுவனத்தை உருவாக்க ஒரு சுவாரஸ்யமான திட்டப்பயணம் உள்ளது. இந்த குழுவின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது உயர்மட்ட மற்றும் கீழ்நிலை அளவீடுகளை மேம்படுத்த உதவுகிறது, மேலும் நிறுவனத்தை திறம்பட வழிநடத்தவும், நிபுணர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுவேன்’ என்று தெரிவித்தார்.
Edelweiss Tokio Life appoints Kayzad Hiramanek as COO
Edelweiss Tokio Life appoints Kayzad Hiramanek as COO | Edelweiss Tokio Life நிறுவனத்தின் புதிய சி.ஓ.ஓ யார் தெரியுமா?