சீனாவைச் சேர்ந்த ஹாக்கிங் கும்பல், முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களை குறிவைத்து வருவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான FBI யின் சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் இணையத்தகவல்களைக் களவாடும் முயற்சியின் ஒரு பகுதியாக முக்கியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஹாக்கிங் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற எல்லா நாடுகளை விடவும் சைபர் அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக எப்.பி.ஐயின் துணை இயக்குனர் பால் அபேட் தெரிவித்துள்ளார்.
ளவு பார்க்கவும் தகவல்களைக் களவாடவும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.