பிரபல நாடொன்றிலிருந்து நாடு கடத்தப்பட்ட 15 இலங்கையர்கள்



சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முற்பட்ட 15 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பகுதியில் வசிக்கும் 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என தெரியவந்துள்ளது.

இலங்கையர்கள் நாடு கடத்தல்

கடந்த 19 நாட்களுக்கு முன்னர் அவர்கள் இழுவை படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலியாவிற்கு பயணித்த போது, ​​அவர்களது இழுவை படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவுஸ்திரேலிய எல்லைக் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இன்று அதிகாலை 4.40 மணியளவில் அவுஸ்திரேலிய விமானப்படைக்கு சொந்தமான ASY-975 விமானம் மூலம் இந்த குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிப்பு

இந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்களுடன் அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் பெருமளவானோர் வந்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களை இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் பொறுப்பேற்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.