உலகம் முழுவதும் 29 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், குரங்கு அம்மை நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.
நெருங்கிய தொடர்பு மூலமாக மட்டுமே இதுவரை இந்நோய் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.