பெட்ரோ – டீசல் விலை
இன்றைய தினத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63-க்கு, டீசல் லிட்டருக்கு ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நடிகை நயன்தாராவிற்கு திருமணம்
இன்று காலை 8.30 மணிக்கு மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு திருமணம் நடைபெற உள்ளது. மேலும் திருமணத்தில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு செல்போன் கொண்டு செல்ல கூடாது என்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ச இன்று ராஜினாமா ?
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தனது பதவியை இன்று ராஜனாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு தொழிலதிபர் தம்மிக்க பெரோரா நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் 53.71 கோடி பேருக்கு கொரோனா
உலகளவில் இதுவரை 53.71 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 50.80 கோடி பேர் குணமடைந்த நிலையில், 63.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் என். ஐ. ஏ சோதனை
சென்னை, மயிலாடுதுறையில் உள்ள 8 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அந்த நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்ச தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். எம்.பி. பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
திகார் சிறையில் தனக்கு பாதுகாப்பு இல்லை: உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் புகார். இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் உள்ளார்
தரமற்ற மளிகை பொருட்களை விற்க ரேஷன் கடை ஊழியர்களை திமுக கட்டாயப்படுத்துகிறது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவேண்டும் என அதிமுக ஒருங்கிணையப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிப்பை வெளியிடுகிறது தேர்தல் ஆணையம். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ந் தேதியுடன் நிறைவடைகிறது
சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் தீ விபத்து.30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்
கொரோனா பரவலால் ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை பயிற்சி நிறுவனம் மூடப்படுகிறது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் துணைப்பதிவாளர் அறிவுறுத்தல்