அரசுப்பள்ளிகளிலேயே LKG, UKG செயல்படும் : அதிருப்தி எதிரொலியால் தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சுமார் 2,381 அரசுப் பள்ளிகளில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 2018ம் ஆண்டு LKG, UKG வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலரும் பணியமர்த்தப்பட்டனர். இந்த திட்டம் பெற்றோர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஆனால் கொரோனா காரணமாக விடுக்கப்பட்ட ஊரடங்கால் வகுப்புகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. இதனால் நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் அனைத்தும் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி பள்ளிகளில் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்டப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் அரசுப்பள்ளிகளில் LKG, UKG பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அதில், பல தரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைக்கிணங்க அரசுப்பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், அதற்காக தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

ALSO READ: 
இறந்த மகனின் உடலை எடுத்து செல்ல ரூ.50,000 லஞ்சம் – பணம் இல்லாததால் பிச்சை எடுத்த பெற்றோர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.