மதுரையில் கோவில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரையில் மேலவாசல் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகின்றது.
இதைத்தொடர்ந்து கோவில் திருவிழாவிற்காக கோவிலை சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில், திருவிழாவை முன்னிட்டு கமிட்டி சார்பாக பட்டாசு வெடிக்கப்பட்டதால் அதில் இருந்து வந்த நெருப்பு பந்தலில் பட்டு தீப்பிடித்து எரியத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களின் வாகனங்கள் மற்றும் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய இரண்டிற்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாகி உள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.