டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை அறிவித்தார், இந்தியா தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார். அதன்படி, ஜூலை 18ந்தேதி அன்றுதேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ந்தேதி நடைபெறும் என அறிவித்தார்.
தற்போதைய இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது, தேர்தல் அதிகாரியாக ராஜ்யசபாவின் செயலாளர் செயல்படுவார் என தெரிவித்தார்.
2022 குடியரசு தலைவர் தேர்தலில், ம் 4,809 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். எந்த அரசியல் கட்சியும் அதன் உறுப்பினர்களுக்கு விப் வழங்க முடியாது என்பதை சுட்டிக்காட்டியவர், ஜூலை 18ந்தேதி அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூன் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று கூறியவர், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ந்தேதி நடைபெறும் என அறிவித்தார்.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,809 (776 எம்பிக்கள் மற்றும் 4,033 எம்எல்ஏக்கள்) என்று கூறியவர், தேர்தல் நடைபெறும் இடம் குறித்த பட்டியல் EC தளத்தில் பதிவேற்றப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் இருப்பதால் பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும் கூறினார்.