பீகாா்,
பீகாா் மாநிலம் சமஸ்திபுரை சோ்ந்தவா் மகேஷ் தாக்கூா் கூலித் தொழிலாளி. இவா் உயிாிழந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால் பிச்சை எடுத்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவா் கூறுகையில், சில நாட்களுக்கு முன்பு எனது மகன் காணாமல் போய்விட்டான். இந்த நிலையில் சா்தாா் ஆஸ்பத்திாியில் தனது மகனின் உடல் உள்ளதாகவும் அதனை பெற்று செல்லுமாறு போன் வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போது உடலை பெற 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உழியா்கள் தொிவித்தனா். இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் நாங்கள் ஏழைகள் எங்களால் எப்படி இவ்வளவு பணத்தை கொடுக்க முடியும்? என கூறினாா்.
இந்த குற்றச்சாட்டு குறித்து நிா்வாகத்தினா் தொிவிக்கையில், இந்த விஷயத்தில் நாங்கள் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்போம் எனவும் இதற்கு காரணமானவர்களை தப்பிக்க விட மாட்டோம் என அவா் தொிவித்தாா். ஆஸ்பத்திாி ஊழியர் யாரேனும் தவறு செய்திருந்தால் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிா்வாகி வினய்குமார் ராய் தெரிவித்தார்.