வேளாண் விளை பொருளுக்கு சந்தை வரி விதித்த தி.மு.க அரசு: ஓ.பி.எஸ் காட்டம்

OPS urges Govt to remove 1% market cess on agriculture produces: வேளாண் விளை பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத (1%) சந்தை வரியை உடனடியாக நீக்க வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அ.தி.மு.க பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அந்தத் திருமணங்களை நடத்தி வைத்தார் ஓ. பன்னீர்செல்வம்.

இதையும் படியுங்கள்: அடுத்தடுத்து சர்ச்சை; ஆக்ரோஷம்; அண்ணாமலை ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இப்போதுள்ள திமுக அரசு அனைத்து வேளாண் பொருள்களுக்கும் ஒரு சதவீதம் சந்தை வரி விதிப்பது என்பது ஏற்புடையது அல்ல என்றார். மேலும், உடனடியாக சந்தை வரியை நீக்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.,வின் கோரிக்கையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த ஓ.பன்னீர்செல்வம் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.