வீடு தேடி வரும் கிசான் உதவி தொகை; தபால் துறையின் புதிய திட்டம்!

இந்தியாவில் உள்ள சிறு குறு விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவிடும் வகையில், பிரதம மந்திரியின் பி.எம். கிசான் சம்மான் நிதி (PM Kisan Samman Nidhi Yojana) திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று தவணையாக 2,000 ரூபாய் என பிரித்து நான்கு மாதத்திற்கு ஒருமுறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்படுகிறது.

Money (Representational Image)

விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், வீட்டுக்கே நேரடியாக இப்பணத்தை கொண்டு வந்து விவசாயிகளிடம் தரும் வகையில் இந்திய தபால் துறை ‘ஆப்கா பேங்க், ஆப்கே துவார்’ (Apka Bank, Apke Dwar) என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, விவசாயிகளுக்கான பி.எம். கிசான் உதவி தொகை நேரடியாக விவசாயிகளின் வீட்டுக்கே கொண்டு சென்று சேர்க்கும் படி இந்திய தபால் துறை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.