பிரபல நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர்!


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் அளித்த பரிசுக்கு, கன்னட நடிகர் சுதீப் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர் துடுப்பாட்டத்தில் மிரட்டினார்.

எதிரணியில் யார் பந்துவீசினாலும் அடித்து துவம்சம் செய்த பட்லர், இந்த சீசனில் 863 ஓட்டங்கள் குவித்தார்.

அவரது அதிரடி ஆட்டத்திற்கு பலர் புதிதாக ரசிகராக மாறியுள்ளனர். நடிகர்கள் பலரும் பட்லரை கொண்டாடினர்.

பிரபல நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர்!

இந்த நிலையில், தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பிரபல கன்னட நடிகர் சுதீப்புக்கு பரிசாக அளித்து பட்லர் இன்ப அதிர்ச்சி கொடுத்து கொடுத்துள்ளார்.

பட்லருக்கு நன்றி கூறும் விதமாக சுதீப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதிரடி மன்னன் ஜோஸ் பட்லர்!

அதில், ‘இது நான் எதிர்பாக்காத பெரிய ஆச்சரியம். முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். இந்த வீடியோ ஜோஸ் பட்லருக்காக தான். எனக்காக கையெழுத்திட்ட பேட்-ஐ அனுப்பி வைத்ததற்கு மிக்க நன்றி.

நான் இதை பெற்றுக்கொண்டேன். இதை நான் மிகப்பெரிய மகிழ்ச்சி என்று தான் கூற வேண்டும். இந்த சீசன் உங்களுக்கு அற்புதமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைவேன். மிக்க நன்றி’ என தெரிவித்துள்ளார்.      





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.