ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் போரில் கலந்து இரண்டு பிரித்தானிய போர் வீரர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக ரஷ்ய ஆதரவு பெற்ற டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியை சுகந்திர பகுதியாக ரஷ்யா அறிவித்து, அத்துடன் அதற்கான பாதுகாப்புகளை வழங்குவதற்காக ரஷ்ய படைகளையும் அந்தப்பகுதிகளுக்கு ரஷ்யா அனுப்பி வைத்தது.
ஆனால் ரஷ்யாவின் இந்த சுகந்திர பிரகடன நடவடிக்கையானது உக்ரைன் மீதான முழுநீளப் போராக மாறி உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து, தற்போது மீண்டும் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை சுகந்திர பகுதிகளாக உருவாக்கும் முயற்சிகளில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
British citizens Aiden Aslin and Shaun Pinner, and Moroccan national Saadoun Brahim, all of whom fought on contract with Ukraine’s military, have been sentenced to death by the Kremlin’s puppet authorities in Donetsk in show trial that lasted mere days. They were not mercenaries. pic.twitter.com/QYGOEkHXHE
— Christopher Miller (@ChristopherJM) June 9, 2022
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கியதில் இருந்தே பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவிற்கு எதிராகவும் போரில் கலந்து கொள்ள தன்னார்வலர்களாக முன்வந்தனர்.
அந்தவகையில், பிரித்தானியாவின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள நெவார்க்கைச் சேர்ந்த ஐடன் அஸ்லின்(28)Aiden Aslin மற்றும் பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த ஷான் பின்னர்(48)Shaun Pinner இருவரும் உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டனர்.
ஆனால் இருவரும் ரஷ்ய படைகளிடம் பிடிப்பட்டு சிறைவைக்கப்பட்டு இருந்த நிலையில், இருவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்கான பயிற்சியில் ஈடுபடதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த ராணுவ மோதலில், உக்ரைன் சார்பாக போரிட்ட இரண்டு பிரித்தானிய வீரர்களுக்கு ரஷ்ய ஆதரவு பெற்ற டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை அளித்து இன்று தீர்ப்பி வழங்கியுள்ளது என ரஷ்யாவின் RIA Novosti செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்கு எதிராக தடுப்புச் சுவர்:பின்லாந்து அரசு அதிரடி!
மேலும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த தன்னார்வல போர் வீரர் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
இருப்பினும் ரஷ்ய செய்தி நிறுவனமான TASS வெளியிட்டுள்ள தகவலில், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் மேல்முறையீடு செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது.