குழந்தைகளே இதுப்போன்ற குழப்பங்களுக்காக நாங்கள் வருந்துகிறோம் என உக்ரைன் தலைநகர் கீவ்வின் வடக்கு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அதன் மாணவர்களுக்காக ரஷ்ய ராணுவத்தினர் செய்தி ஒன்றை அளித்துள்ளனர் என CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற உக்ரேனிய கிராமமான Katyuzhanka பகுதிகளை உக்ரைன் படைகள் திரும்பவும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள உள்ளூர் பள்ளி ஒன்றை ரஷ்ய படைகள் அடித்து நொறுக்கி சூறையாடி இருப்பதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் ஆய்வு நடத்தியதில், அந்த பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய படை வீரர்களால் எழுத்தப்பட்ட தகவல் ஒன்று கண்டறியப்பட்டது.
கரும்பலகையில் இடம்பெற்று இருந்த அந்த குறிப்பு முழுமையும் ரஷ்ய மொழியில் இடம்பெற்று இருந்தது.
🇷🇺 soldiers, when leaving the village of Katyuzhanka in the Kiev’s Vyshgorod district, left a message for 🇺🇦 school students. It is not a message of hate, but rather of peace and hope.(It is 🇺🇦 school – letters in the small posters below the board).
(right-hand side board:/2)
/1 pic.twitter.com/GH1FxKt8Mh— Mike Mihajlovic (@MihajlovicMike) April 8, 2022
அதில், “குழந்தைகளே, இதுபோன்ற குழப்பத்திற்கு வருந்துகிறோம், நாங்கள் பள்ளியைக் காப்பாற்ற முயற்சித்தோம், ஆனால் ஷெல் தாக்குதல் நடந்தது.
“அமைதியாக வாழுங்கள், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள், உங்கள் பெரியவர்கள் செய்த தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள். உக்ரைனும் ரஷ்யாவும் ஒரே மக்கள்!!! சகோதர சகோதரிகளே, உங்களுடன் அமைதி நிலவட்டும்!” எனத் எழுதியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் போரில் ஈடுபட்ட பிரித்தானிய வீரர்களுக்கு…ரஷ்யா வழங்கியுள்ள பயங்கர தண்டனை!
இதுத் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மிகோலா மிகச்சிக் தெரிவித்த கருத்தில், ரஷ்ய வீரர்கள் பள்ளியில் இருந்து எதையும் விட்டுச் செல்லவில்லை, மேலும் அந்த குறிப்பை படித்தபோது மிகவும் அருவருப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.