வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்-உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டிக்காக இறுதி செய்யப்பட்டிருக்கும் 10 பள்ளிகளில், இந்தியாவைச் சேர்ந்த ஐந்து பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘டி4 எஜுகேஷன்’ என்ற நிறுவனம், முதன் முறையாக உலகின் சிறந்த பள்ளிகளுக்கான போட்டியை நடத்துகிறது.
சமூகத்துடன் இணைந்து செயல்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு, இடர்பாடுகளில் இருந்து மீளுதல், ஆரோக்கிய வாழ்க்கைக்கு ஆதரவு ஆகிய ஐந்து பிரிவுகளில் இப்போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் பள்ளிக்கு தலா, 35 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
.இப்போட்டிக்கு தேர்வான 50 பள்ளிகளில், இறுதி செய்யப்பட்டிருக்கும் 10 பள்ளிகளில் இந்தியாவைச் சேர்ந்த, ஐந்து பள்ளிகள் இடம் பிடித்துள்ளன.சமூகத்துடன் இணைந்து செயல்படும் பிரிவில், மும்பையின் கோஜ் பள்ளி மற்றும் புனேவின் பி.சி.எம்.சி., பள்ளிகள் தேர்வாகியுள்ளன.புதிய கண்டுபிடிப்பு பிரிவில், மும்பையைச் சேர்ந்த சி.என்.எம்., பள்ளி, டில்லியின் எஸ்.டி.எம்.சி., ஆகியவை தேர்வாகிஉள்ளன. இடர்பாடுகளை சமாளித்து சிறப்பாக செயல்பட்ட பள்ளிகள் பிரிவில், மேற்கு வங்கத்தின் ஹவுராவில் உள்ள ‘சமாரிட்டன் மிஷன்’ பள்ளி தேர்வாகியுள்ளது. இறுதிப் போட்டி அக்.,ல் நடக்க உள்ளது.
Advertisement