சென்னை-சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து, வரும் 29ம் தேதி புறப்படும் விமான சுற்றுலாவில், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்வார் ஆகிய இடங்களை காணலாம். 13 நாட்கள் சுற்றுலாவில் ஒருவருக்கு, 49 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம்
சென்னையில் இருந்து அடுத்த மாதம் 28ம் தேதி புறப்படும் மற்றொரு விமான சுற்றுலாவில், அமர்நாத் பனிலிங்கம், ஸ்ரீநகர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம். நான்கு நாட்கள் சுற்றுலாவில், ஒருவருக்கு 53 ஆயிரத்து 800 ரூபாய் கட்டணம். மேலும் விபரங்களுக்கு, 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.
சென்னை-சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.