முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
I am terribly disappointed by the press conference given by former Minister Basil Rajapaksa. This is NOT a laughing matter our countries future has been ruined you are not taking responsibility. Stop these political dramas. Please man up! https://t.co/7Ftq3O1QH8
— Sanath Jayasuriya (@Sanath07) June 9, 2022
அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் மேலும் பதிலளித்தார்.
எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,
உங்கள் அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்
“முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விஷயம் அல்ல. எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது, இதற்காக நீங்கள் பொறுப்பேற்கவில்லை.
இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள் என அவர் டுவீட் செய்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த பசில் ராஜபக்ச கடந்த மே மாதம் 09ம் திகதி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததை அடுத்து தனது அமைச்சரவை இலாகாவை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.