அபுஜா:நைஜீரியாவில், பயங்கரவாதிகள், 32 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்., அமைப்பின் கீழ் செயல்படும் புலானி என்ற பயங்கரவாத பிரிவு, விவசாயிகளை கிராமங்களில் இருந்து வெளியேற்றி, நிலங்களை ஆக்ரமித்து வருகிறது.கடுனா மாவட்டத்தில் கஜூரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளனர். கிராம மக்கள் அருகில் உள்ள புதர்களில் மறைந்துள்ளனர். அவர்களை பயங்கரவாதிகள் தேடிச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இதே போல நான்கு கிராமங்களில் அடுத்தடுத்து நுழைந்த பயங்கரவாதிகள், 32 பேரை கொலை செய்துள்ளனர்.போலீசார், ஆங்காங்கே புதர்களில் கிடந்த உடல்களை கைப்பற்றினர். அதன்படி கைப்பற்றப்பட்ட, 28 உடல்களை கிராம மக்கள் துணையுடன் அடக்கம் செய்தனர். கடந்த, 5ம் தேதி ஓன்டோ நகரில் உள்ள தேவாலயத்தில், பயங்கரவாதிகள், 30க்கும் மேற்பட்டோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நடந்த, 24 மணி நேரத்தில் கஜூராவில், 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Advertisement