பாக்முட்:உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இரு தரப்பு வீரர்களும் தெருவில் இறங்கி சண்டையிட்டு கொண்டனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரியில் போர் தொடங்கியது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது முதல், ரஷ்யா மீது 46 நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ‘உக்ரைனின் சிவிரோடொனெட்ஸ்க் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள பகுதிகளை உக்ரைனிய படைகள் தங்கள் கட்டுக்குள்ளேயே வைத்துள்ளன’ என அந்நகர மேயர் அலெக்சாண்டர் ஸ்டிரையுக் கூறியுள்ளார். ‘ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலில் ஈடுபட்டபோதும், பாதுகாப்பு படைகள் நகரை கட்டுக்குள்ளேயே வைத்துள்ளன.
எனினும் சிவிரோடொனெட்ஸ்க் நகரில் உள்ள மக்களை வெளியேற்றுவது என்பது தற்போது சாத்தியமற்றது. நகரில் 10 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இதை தாக்குதலுக்கான முக்கிய இலக்காக ரஷ்யா பயன்படுத்தி வருகிறது’ எனவும் அவர் கூறியுள்ளார்.உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய படையினர் நேற்று தொடர் தாக்குதல் நடத்தினர். அப்போது, இருதரப்பு வீரர்களும் சாலையில் இறங்கி சண்டையிட்டனர்.
Advertisement