தாதாக்களின் வாழ்க்கை சினிமா: ராம்கோபால் வர்மாவின் அடுத்த அதிரடி

அதிரடி இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் படங்கள் பெரும்பாலும் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பற்றியது. இந்த நிலையில் அவர் இயக்கத்தில் அடுத்து வரும் படம் கொண்டா. இது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிரபல தாதாக்களாக இருந்த கொண்டா முரளி மற்றும் கொண்டா சுரேகாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.

கொண்டா முரளியாக திரிகுன்ஹா நடிக்கிறார். மோர் கொண்டா சுரேகாவாக நடிக்கிறார். இப்படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.

இதில் ராம்கோபால் வர்மா பேசியதாவது: விஜயவாடா ரவுடிகள் மற்றும் ராயலசீமா கோஷ்டிகளை வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளேன். கொண்டா முரளியை பற்றி நான் கேள்விப்பட்டது வித்தியாசமாக இருந்தது. அவரை சந்தித்து பேசினேன். இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது. கிராமிய பின்னணியில் ஒரு தாதா கதை என்பதே சுவாரஸ்யமானதாக இருந்தது. முரளி மற்றும் சுரேகாவின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் எனக்கு விசேஷமாக தோன்றியது. இதுபோன்ற வாழ்க்கையை நான் கேள்விப்பட்டதே இல்லை. அவர்களை படித்து, ஆய்வு செய்து அதனை திரைப்படமாக்கி உள்ளேன். என்றார்.

இந்த படத்தை தயாரிப்பது கொண்டா முரளியின் மகள் சுஷ்மிதா படேல். அவர் படம் குறித்து கூறும்போது ராம்கோபால் வர்மா மிக யதார்த்தமாக எடுத்துள்ளார். 1980களில் நடக்கும் கதை. ராம்கோபால் வர்மா படம் எடுக்க எங்களிடம் வந்ததும் உற்சாகமாக இருந்தது. எல்லோருக்கும் ஆசையாக இருந்தது.

அம்மா, அப்பா இருவரும் மாணவர் தலைவர்களாக ஆரம்பித்து, பின் தீவிர சமூகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். அரசியல் ரீதியாக பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தார். நலிந்த பிரிவினருக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக வளர என் தந்தை மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். கொண்டா முரளி, கொண்டா சுரேகாவின் ஆட்சி அவ்வளவு எளிதல்ல.

எவ்வளவு ஏற்றத் தாழ்வுகளுடன், எஜமானர்களின் கைகளில் தள்ளப்பட்டு, சாதாரண தொழிலாளியிலிருந்து மாநிலத் தலைவர்களாக உயர்ந்துள்ளனர். இதையெல்லாம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். படத்தை நானே தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். என்றார்.

படத்தில் பிருத்விராஜ், பார்வதி அருண், பிரசாந்த், எல்பி ஸ்ரீராம், துளசி, 'ஜபர்தஸ்த்' ராம் பிரசாத், அபிலாஷ் சவுத்ரி, ஷ்ரவன், அனில் குமார் ரெட்டி லிங்கம்பள்ளி, கிரிதர் சந்திரமௌலி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.