தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டையில், 4 மாதங்களுக்கு முன்பு வாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதறி, பற்றி எரிந்த தீயால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.
டுப்பாக் மண்டல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணா என்பவர் தனது வீட்டின் அருகே சார்ஜ் செய்வதற்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்திருந்த நிலையில், சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியது.
பற்றி எரிந்த தீயால் வீடு முழுவதும் எரிந்து சேதமான நிலையில், வீட்டிலிருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.