நரைமுடி.பொடுகு, தலைப்பேன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? சீகைக்காயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க


சீகைக்காயில் நிறைந்துள்ள சத்து பொருட்கள் நம் தலைமுடியின் வேர்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

அதுமட்டுமின்றி இது முடியில் உள்ள எண்ணெய் பசையை போக்கவும், முடிக்கு போஷாக்கு அளிக்கவும் உதவுகிறது.

இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. கூந்தலுக்கு பளபளப்பை தருகிறது.

ஆயுர்வேத ஷாம்புகள் மற்றும் சோப்புகள் தயாரிப்பில் சீகைக்காய் முக்கியமானது.

இதனை ஒரு சில பொருட்களுடன் பயன்படுத்தினால் நல்ல பலனை பெற முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.  

நரைமுடி.பொடுகு, தலைப்பேன் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? சீகைக்காயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

  • சீகைக்காய் பேஸ்ட்டை உருவாக்க, 2-3 டீஸ்பூன் சீகைக்காய் பொடியை 2 கப் தண்ணீருடன் கலக்க வேண்டும். கூடுதல் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த கலவையை கூந்தலில் தடவி பிறகு நீரில் அலசுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தி வர பளபளப்பான கூந்தலை பெற முடியும்.
  • சீகைக்காய் தூளுடன் தயிர் சேர்த்து குழைத்து உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு அப்ளை செய்து வாருங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். . இது முடியை வேர்களில் இருந்து பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்தல், முடி சேதம் இவற்றை தடுக்கிறது.
  • சீகைக்காய் காய்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் லெமன் சேர்த்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரை கூந்தலில் அலசி வர பொடுகு மற்றும் பேன்களில் இருந்து விடுபட முடியும்.
  • சீகைக்காய் தூள் மற்றும் தயிரை சேர்த்து உச்சந்தலையில் தடவி வாருங்கள். 20-30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது பிளவுபட்ட முடிகள், முடி உதிர்தலை தடுக்கிறது. சீகைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். அந்த தண்ணீரை கொதிக்க வைத்து காலையில் எழுந்ததும் அதைக் கொண்டு கூந்தலை அலசுங்கள்.இது கூந்தலுக்கு இயற்கையாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் மேலும் பளபளப்பான தோற்றத்தை அளிக்க உதவுகிறது.
  • அரை கப் கற்பூர எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டீஸ்பூன் வேப்பிலை தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், 1 டீஸ்பூன் சீகைக்காய் தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, மிகவும் கெட்டியாக இருந்தால், மேலும் இரண்டு துளிகள் எள் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தி வாருங்கள் . இதை அப்ளை செய்த பிறகு 20-30 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பிறகு ஷாம்பு கொண்டு தலையை அலசி வாருங்கள். இது தலையில் பேன் உருவாகுவதை தடுக்கிறது.
  • 2-3 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பொடி சேர்த்து குழைத்து உச்சந்தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து வாருங்கள். பிறகு 40 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசிட வேண்டும். வாரத்திற்கு 1-2 முறை இதை செய்து வாருங்கள்.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.