நா ராஜா.. இன்போசிஸ் சிஇஓ இடத்தை பிடித்த விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட்.. செமி டிவிஸ்ட்..!

இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் சிஇஓ-க்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தில் நாளுக்கு நாள் இடைவெளி அதிகரித்து வரும் நிலையில், சிஇஓ-க்களுக்கு மத்தியில் யார் அதிகமான சம்பளத்தை வாங்குவது என்பதில் பெரும் போட்டி நிலவுகிறது.

இதற்கிடையில் 2022ஆம் நிதியாண்டுக்கான சிஇஓ சம்பளத்தை நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் வெளியிட்டு வரும் நிலையில், இன்று இன்போசிஸ் சிஇஓ-வை முதலிடத்தில் இருந்து தள்ளி விட்டு ராஜா கணக்காகப் பிடித்துள்ளார் விப்ரோ சிஇஓ
தியரி டெலாபோர்ட்.

மார்ச் 31 உடன் முடிந்த 2021-22ஆம் நிதியாண்டின் விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?!

50% வரை வீழ்ச்சி அடைந்த கிரிப்டோகரன்ஸி: எதிர்காலத்தில் என்ன ஆகும்?

ஐடி சேவை நிறுவனங்கள்

ஐடி சேவை நிறுவனங்கள்

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் வருடாந்திர முடிவுகளைக் கணக்கிடும் போது தத்தம் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த சிஇஓ-க்களின் சம்பள விபரங்களை வெளியிட்டு வருகிறது.

விப்ரோ

விப்ரோ

இதன் படி இந்தியாவில் 3வது பெரிய மென்பொருள் ஏற்றுமதி சேவை நிறுவனமாக இருக்கும் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ தியரி டெலாபோர்ட் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கு சுமார் 79.8 கோடி ரூபாய் ($10.51 மில்லியன்) அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.

தியரி டெலாபோர்ட் - முதல் இடம்
 

தியரி டெலாபோர்ட் – முதல் இடம்

இந்தத் தரவுகளை விப்ரோ நிறுவனம் அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான SEC அமைப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் விப்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியா ஐடி சேவை துறையில் அதிகச் சம்பளம் வாங்கும் நிர்வாக அதிகாரியாகத் தியரி டெலாபோர்ட் திகழ்கிறார்.

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

லாக்டவுன் கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்று லாக்டவுன் கட்டுப்பாடுகள் உச்சத்தில் இருந்த ஜூலை 2020 இல் தியரி டெலாபோர்ட் விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ-வாகச் சேர்ந்தார். சுமார் 1 வருடம் மொத்த வர்த்தகத்தையும் வெளிநாட்டில் இருந்தே கவனித்து வந்தார். இதன் முலம் கடந்த நிதியாண்டில் 9 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம் அளிக்கப்பட்ட நிலையில் 2020-21 நிதியாண்டில் தியரி டெலாபோர்ட்-வின் சம்பளம் ரூ. 64.3 கோடி ($8.7 மில்லியன்) ஆகும்.

சம்பள பிரிவுகள்

சம்பள பிரிவுகள்

தியரி டெலாபோர்ட் 2021-22ஆம் நிதியாண்டுக்கு $1.74 மில்லியன் (ரூ. 13.2 கோடி) சம்பளம் மற்றும் அலவன்ஸ் ஆகவும், $2.55 மில்லியன் (ரூ. 19.3 கோடி) கமிஷன்கள் மற்றும் வோரியபிள் பே ஆகவும், மற்ற நன்மைகளின் அடிப்படையில் $4.2 மில்லியன் (ரூ. 31.8 கோடி) பெற்றுள்ளார். மீதமுள்ளவை நீண்ட கால இழப்பீடு அல்லது ஒத்திவைக்கப்பட்ட நன்மைகள் ஆகும்.

இன்போசிஸ் டிசிஎஸ்

இன்போசிஸ் டிசிஎஸ்

இதே போல் 2022ஆம் நிதியாண்டுக்கு இன்போசிஸ் சிஇஓ-வின் சம்பளம் 43 சதவீதம் அதிகரித்து 71 கோடி ரூபாய்ப் பெற்றுள்ளார்.

மேலும் டிசிஎஸ் சிஇஓ கோபிநாதன் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 27 சதவீதம் உயர்வுடன் 25.77 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.

ரிஷாத் பிரேம்ஜி

ரிஷாத் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் ஆசிம் பிரேம்ஜி-யின் மகனான ரிஷாத் பிரேம்ஜி 2022ஆம் நிதியாண்டின் சம்பளம் 1.62 மில்லியன் டாலரில் இருந்து 1.82 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அதாவது 11.8 கோடி ரூபாயில் இருந்து 13.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Wipro CEO Thierry Delaporte FY22 salary Rs 79.8 crore; beats Infosys CEO salil parekh

Wipro CEO Thierry Delaporte FY22 salary Rs 79.8 crore; beats Infosys CEO salil parekh, highest paid CEO in India’s IT sector.

Story first published: Friday, June 10, 2022, 13:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.